தஞ்சை அருகே மாதாக்கோட்டை பைபாஸ் பாலம் அருகே கார் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா மற்றும் இரு மகள்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வல்லத்தை சேர்ந்த அறிவழகன் தனது மனைவி, இருமகள்கள் மற்றும் தங்கை மகளுடன் ஒரு பைக்கில் பனங்காட்டில் உள்ள கோயிலுக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.