கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வீட்டுக்குள் புகுந்த ஐந்தடி நீளமுள்ள நல்ல பாம்பினை தீயணைப்பு துறையினர் மீட்டனர். துப்புரவு காலனி பகுதியில் வசித்து வரும் ஏழுமலை என்பவரது வீட்டிற்குள் மகள் மட்டும் தனியாக இருந்த நிலையில், பாம்பு புகுந்ததை கண்டு அவர் அலறியுள்ளார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு பாம்பு பிடிக்கப்பட்டது.