காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற மனைவி, ஆண் நண்பர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். மேவலூர்குப்பத்தில் காய்கறி மற்றும் பிரியாணி கடை நடத்திவரும் அரிகிருஷ்ணன் மனைவி பவானிக்கும், பிரியாணி மாஸ்டர் மதன்குமாருக்கும் தகாத உறவு இருந்தது. இதையறிந்த அரிகிருஷ்ணன், மதன்குமாரை வேலையை விட்டு நிறுத்திவிட்டு மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அரிகிருஷ்ணனை கொல்ல, திருவாரூர் மாவட்ட கூலிப்படையை ஏவியுள்ளனர். இதையடுத்து, டூவீலரில் சென்ற அரிகிருஷ்ணன் மீது கூலிப்படை கார் ஏற்றி கொல்ல முயன்ற நிலையில், அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.இதையும் படியுங்கள் : வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய கரடியை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறல்