சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டி கிராமத்தில் நடந்த கண்மாய் மீன்பிடி திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கிராமத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க மடைக்கருப்பர் கோயிலில் வழிபாடு நடத்திய பின் மீன்பிடி உபகரணங்களுடன் மக்கள் கண்மாயில் இறங்கி மீன் பிடிக்க ஆரம்பித்தனர். கண்மாயில் போதிய அளவு மீன்கள் இல்லாத நிலையில் சிலேபி, குரவை, விரா உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிலருக்கு கிடைத்தன.