கடற்கரையில் இருந்து 5 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள் விசைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி கேட்டுக் கொண்டுள்ளார். விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் தூண்டில் வலைகளில் சிக்கி ஆமைகள் உயிரிழப்பதாக கூறியவர், கடலூர், நாகை, சென்னை கடற்கரை பகுதியில் கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரத்து 308 ஆமைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.