61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து தூத்துக்குடியில் 240 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றனர். வான வேடிக்கை நிகழ்ச்சியை நடத்தி விட்டு உற்சாகமாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இந்த ஆண்டு மீன்பிடி தொழில் நன்றாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மீன்களின் இனப் பெருக்கத்திற்காக தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15ம் தேதி அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.இதையும் படியுங்கள் : திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்... நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்