மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற சென்னை காசிமேடு மீனவர்கள் இன்று கரை திரும்பிய நிலையில், மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து வகை மீன்களின் வரத்தும் அதிகமாக இருந்த நிலையில், பொதுமக்களும், சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளும் குவிந்தனர். வஞ்சரம் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், கொடுவா, தேங்காய் பாறை உள்ளிட்டவை கிலோ 800 ரூபாய்க்கும், இதர மீன் வகைகள் கிலோ 400 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.இதையும் படியுங்கள் : சமூக நீதிக்காக போராடிய தமிழர்களை மறந்தது ஏன்?