வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பாண்டி மெரினா நிர்வாகம் செயல்படுவதை கண்டித்து புதுச்சேரியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வம்பாக்கீரை பாளையம், திற்பராயப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமத்தையொட்டிய கடற்கரை பகுதியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அந்த வகையில், தனியாருக்கு பொழுது போக்கு பூங்கா அமைப்பதற்கும்,ஹோட்டல்கள் வைக்கவும் அனுமதி அளித்துள்ளது.இந்த நிலையில், தங்களுக்கு கடற்கரையில் கடைகள் உள்ளிட்டவைகள் வைக்க அனுமதி அளிக்காமல், தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மெரினா நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.