Also Watch
Read this
கடலுக்கு செல்ல போவதில்லை என மீனவர்கள் அறிவிப்பு.. மீன்களுக்கு உரிய விலை இல்லாத காரணத்தால் அறிவிப்பு
மீன் பிடிக்க செல்ல மாட்டோம்
Updated: Sep 13, 2024 12:26 PM
ஓணம் பண்டிகையையொட்டி மீன்களுக்கு உரிய விலை இல்லாததால் கடலுக்கு செல்ல போவதில்லை என தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் அறிவித்தனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் ஏலம் எடுப்பதற்காக கேரள வியாபாரிகள் வருவார்கள்.
ஓணம் பண்டிகையையொட்டி கேரள வியாபாரிகள் 5 நாட்கள் வரை மீன் வாங்க வருவதில்லை என்பதால் மீன்களுக்கு உரிய விலை இருக்காது.
இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல போவதில்லை என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் கரையில் 265 விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved