சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மீனவர் தெருவில் வாய்க்கால் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய மறுப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வலசக்கல்பட்டி ஏரியிலிருந்து நடுவலூர் செல்லும் வாய்க்கால் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய வருவாய்துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு 6 மாதத்திற்கு முன்பே நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் மாற்று இடம் கொடுக்கப்பட்டும் அதனை ஏற்க அப்பகுதி மக்கள் மறுத்தனர். அந்த இடம் மலையடிவாரத்தில் உள்ளதாகவும், போலி பட்டா எனவும் மக்கள் குற்றம்சாட்டினர்.