கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் மாயமானார். கடந்த புதன் கிழமை அன்று கோடி முனையை சேர்ந்த ஆரோக்கிய ஜூடின் என்பவர் பைபர் படகில் தனியாக மீன்பிக்க சென்ற போது மின்னல் தாக்கி பேட்டரி வெடித்து சிதறியதில் ஆரோக்கிய ஜூடின் மாயமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரோக்கிய ஜூடினை தேடி சென்ற மீனவர்கள் வெகு நேரம் தேடியும் கிடைக்காததால் குளச்சல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.இதனையடுத்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.