திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே மீனவ கிராமங்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், கோரை குப்பம் மீனவ கிராம மக்கள், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோரை குப்பம் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது, குணம் குப்பம் மற்றும் வைரவன் குப்பம் மீனவர்கள் அத்து மீறியதாக கூறப்படுகிறது.