புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதி குளங்களில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் அதிகாலை முதலே வலைகளுடன் கரையில் காத்திருந்த மக்கள் அனுமதி வழங்கப்பட்ட பின்பு குளத்துக்குள் இறங்கி வலைகளை வீசினர். இதில் கெளுத்தி, விரால், கெண்டை, கட்லா, குறவை, உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் வலையில் சிக்கியதால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சியுடன் அள்ளிச் சென்றனர்.