தேனி அருகே பள்ளியில் சேர்த்த மாணவியை, ABCD தெரியவில்லை என்று மூன்று நாள் கழித்து நீக்கியதாக தனியார் பள்ளி மீது தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த குணமுத்து என்பவர் அங்குள்ள விக்டரி மெட்ரிகுலேஷன் என்ற பள்ளியில் தனது மகளை முதலாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.மூன்று நாட்களுக்கு பிறகு குழந்தைக்கு மனநலம் குன்றியிருப்பதாகக் கூறி பள்ளி நிர்வாகம் TC வழங்கியுள்ளதாக அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.