தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மைப்பாறை கிராமத்தில் உரிமம் இன்றி சட்டவிரோதமாக பட்டாசு ஆலை நடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு வெடி விபத்து ஏற்பட்டு கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், ஆகாஷ் என்ற பட்டாசு ஆலையின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். இந்நிலையில் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக பணியாளர்களை கொண்டு ஆலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.