கடலூரில் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வான் பாக்கம் கிராமத்தில் மரணமடைந்த மூர்த்தி என்பவரது உடல் அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் ஒன்று தவறுதலாக டிராக்டரில் வெடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசு மீது விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த ராஜேஷ், விஜய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.