சென்னை வானகரம் அருகே பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். வானகரம் செட்டியார் அகரம் பிரதான சாலையில் ராஜ்ப்ரீத் என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இதில் வீட்டிற்கு தேவையான சோபா, கட்டில் உள்ளிட்ட மர சாமான்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை காலை மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தகவலறிந்து 4-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்கள் தீக்கிரையாகின.