மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூக்கடையில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள விஷ பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பூக்கடையில் பாம்பு இருப்பதாக கடை உரிமையாளர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் விரைந்து வந்த வீரர்கள் 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை சாதுர்யமாக பிடித்து வனத்துறைக்கு தகவல் அளித்து பாம்பை வனப்பகுதிக்குள் விட்டனர்.இதையும் படியுங்கள் : வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை நாய் குறைத்தால் ஆக்ரோஷமான யானை..!