ஈரோடு அருகே காவலரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி அவரது குடும்பத்தினர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர். அம்மாபேட்டையை சேர்ந்த செல்லகுமார்,வாகன ஓட்டுநர் பிரபுதேவாவுடன் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்தார்.