சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்ததால் பரபரப்பு நிலவியது. எட்டிக்குட்டைமேடு பகுதியை சேர்ந்த ஆனந்தன், தீபாவளி பண்டிகைக்காக விற்ற பட்டாசு போக மீதமிருந்த பட்டாசுகளை மாமனார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த போது திடீரென பட்டாசுகள் வெடித்தது. அப்போது அருகில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் சேதமானது.