உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அமைதி பகுதிகளாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்விக் கூடங்கள் மற்றும் நீதிமன்ற வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு மற்றும் நச்சுப்புகை சுற்றுச்சூழலுக்கும், நமது ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.