தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு விற்பனை தமிழகம் முழுவதும் களைகட்டியுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் ரோபோ ஒன்று வாடிக்கையாளர்களுக்கு பட்டாசு விற்பனை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பட்டினம்காத்தானில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடையில் வித்யாசமாக பட்டாசு விற்பனைக்காக ரோபோவை ஈடுபடுத்தியுள்ளனர். வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பட்டாசுகளை எடுத்து செல்லும் பணியில் ரோபோ ஈடுபட்டு அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறது.இதையும் படியுங்கள் : அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் 5,000 மூட்டை நெல்