சேலம் அருகே தார்ச்சாலையில் வெள்ளைக் கோடுகள் வரைந்து கொண்டிருந்தபோது, இயந்திரத்தின் கேஸ் சிலிண்டர் வெடித்ததன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சின்னப்பம்பட்டி - கொங்கணாபுரம் சாலையில் வெள்ளைக் கோடு வரையும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்து சிலிண்டர் வெடித்தது.