கரூரில் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தின் பின் பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறிய சிறிது நேரத்தில், பைக் முழுவதும் தீ பரவியது.