தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள மரக்கடையில் மின் கசிவு காரணமாக அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க 2 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடிய நிலையில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளன.