திருப்பூர் அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால், வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அறையில் மின்கசிவு ஏற்பட்டு புகை சூழ்ந்ததால், குடும்பத்தினர் வெளியேறினர். அப்போது கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில், வீடு மற்றும் பனியன் நிறுவன கட்டடம் முழுமையாக இடிந்து தரைமட்டமானது.