சேலம் மாவட்டம் மேட்டூர் தொழிற்பயிற்சி கல்லூரி மைதானத்தில் உள்ள தேக்கு மர தோப்பு, திடீனெ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பல ஏக்கர் பரப்பளவில் தேக்கு மர தோப்பு உள்ள நிலையில், அங்கு கிடந்த இலை குப்பைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பனை மற்றும் தேக்கு மரங்கள் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், அருகில் உள்ள தொழிற்பயிற்சி ஆய்வு கூடத்திற்கு தீ பரவாமல் தடுத்தனர்.