தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையின் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனிடையே சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அனுமதியில்லாமல் இயங்கி வந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.