சென்னை முகப்பேர் வள்ளலார் நகர் பகுதியில் உள்ள ஆட்டோமொபைல் பழுது பார்க்கும் ஷெட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீ மளமளவென பரவி ஷெட் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.