விருதுநகர் மேலத்தெரு பேட்டை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின. விசாரணையில், ராஜா என்பவரின் வீட்டில் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டு, அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது தெரியவந்தது. இந்நிலையில், குடிசைகள் எரிந்து அனைத்தும் சேதமடைந்ததாக மக்கள் கண்ணீருடன் வேதனை தெரிவித்தனர்.