திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பை சேமிப்பு கிடங்கில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால், அங்கு வசிக்கும் மக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதாக கவலை தெரிவித்தனர். குப்பை கிடங்கில் தீவைத்த மர்மநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.