திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சிற்றுண்டி கடையில் கேஸ் சிலிண்டர் கசிவால் பிடித்த தீயை கடை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். பஷீராபாத் பகுதியை சேர்ந்த அஃப்ரோஸ் என்பவரது சிற்றுண்டி கடையில் வாடிக்கையாளர்கள் உணவருந்தி கொண்டிருந்தபோது, தீப்பற்றிய நிலையில் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.