சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள டெலிகாம் அலுவலகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் புறநகர் மின்சார ரயில்களுக்கு சிக்னல் அளிப்பதில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாகா சிக்கல் நிலவியது. எழும்பூர் – கடற்கரை மார்க்கத்தில் சிக்னல் பிரச்சனையானது கண்டறியப்பட்டதாகவும், தொடர்ந்து அது சரி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.