இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே திருமால்பூர் மணிக்கண்டீஸ்வரர் கோவில் தேரோட்ட திருவிழாவில், பட்டாசு வெடித்த போது அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கோபுரத்தில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. செல்வ விநாயகர் கோவிலில் இன்னும் சில மாதங்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், கோபுரத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோபுரத்தைச் சுற்றி தென்னங்கீற்றால் தடுப்புகள் கட்டப்பட்டிருந்த நிலையில், தேரோட்டத்தில் வெடித்த பட்டாசு தீப்பொறி பட்டு தடுப்புகள் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. முன்னெச்சரிக்கையாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு உடனடியாக தீ அணைக்கப்பட்டது.இதையும் படியுங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்.. அமித்ஷா படத்திற்கு பதில் நடிகர் சந்தான பாரதி புகைப்படம்