திண்டுக்கல்லில் கார் பழுது நீக்கும் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. திண்டுக்கல் - பழனி பைபாஸ் சாலையில் கொட்டப்பட்டி அருகே உள்ள "மேக்" என்கிற பெயரிலான 4 சக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் பட்டறையின் எதிரே மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி, 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், தகவலறிந்து 2 வாகனங்கள் வந்த தீயணைப்புப் படையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.