விழுப்புரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களை போக்குவரத்து போலீசார் அகற்றி, சுமார் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணின் உத்தரவை அடுத்து சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுரை கூறினர்.