திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இறுதி நிகழ்வாக நடைபெற்ற நம்மாழ்வார் மோட்ச நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலில் ஸ்ரீரங்கம் கடந்த டிசம்பர் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி கடந்த 10 ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற ராப்பத்து உற்சவத்தின் 10 நாள் தீர்த்தவாரியும், அதனை தொடர்ந்து நம்மாழ்வார் மோட்சம் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.