காஞ்சிபுரம் மாமன்ற கூட்டத்தில் மாநகரப் பகுதிகளில் குப்பைகளை அள்ளுவதில்லை என மாறி மாறி புகார்களை அடுக்கியதால் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேக்கமடைந்து கிடப்பதாக மாநகராட்சி அதிகாரிகளிடம், அதிமுக, பாமக, சுயேட்சை கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். ஒருகட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள், பணியாட்கள் மற்றும் குப்பை வாகனங்கள் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், திமுக கவுன்சிலர்கள் குறுக்கிட்டு பேசியதால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.