வேலூர் மாவட்டம் பரதராமி பகுதியில் உரத்தட்டுப்பாடு இருந்து வந்த நிலையில், வீரிசெட்டிபல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உரம் வந்துள்ளதாக தகவல் அறிந்து ஏராளமான விவசாயிகள் அங்கு குவிந்தனர். பரதராமி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தேவையான உரம் கிடைக்காததால், தனியாரிடம் அதிக விலைக்கு உரம் வாங்கும் சூழல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தும், விவசாய நிலம் அல்லாத நபர்களே அதிக அளவில் உரங்களை வாங்கி செல்வதாகவும், அவர்கள் கூடுதல் விலைக்கு உரத்தை விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.இதையும் படியுங்கள் : மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு