நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையேயான சிவகங்கை கப்பல் சேவை, வரும் 19-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை வானிலை காரணமாக நிறுத்தப்படுவதாக சிவகங்கை கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 18-ம் தேதிக்கு பிறகு மீண்டும் கப்பல் சேவை தொடங்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.