ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு கடற்கரையில் காற்றின் வேகம் காரணமாக புதிய விசைப்படகு மூழ்கிய நிலையில் ஆறு பேர் உயிர் தப்பினர். மீன்பிடி தடைக்காலம் முடிவடையவுள்ள நிலையில் விசைப்படகுகளின் பராமரிப்புபணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மண்டபம் தெற்கு துறைமுகத்தில் பழுது நீக்கப்பட்ட விசைப்படகை, சோதனை ஓட்டமாக ஓட்டி சென்றபோது பாம்பன் பாலம் வழியாக கடக்க முயன்றதில் இவ்விபத்து நேர்ந்தது.