செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதியதில் மாதவரம் மகளிர் காவல் நிலைய காவலர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மாதவரம் காவல் நிலைய எஸ்.ஐ ஜெயஸ்ரீ, காவலர் நித்யா ஆகியோர் குற்றவாளியை பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. சிறு நாகலூர் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் எஸ்.ஐ ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிகிச்சை பலனின்றி காவலர் நித்யாவும் உயிரிழந்த நிலையில், மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.