பெண் தூய்மைப் பணியாளரை தகாத வார்த்தை பேசி, குப்பை எடுக்கும் வாகனத்தை பறித்து அராஜகம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பேரூராட்சி பெண் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை அன்று குளத்துப்பட்டியில் தூய்மை பணி செய்த பெண் ஊழியரிடம் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி மன்ற தலைவர் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.