மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த ராசாத்தி என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹவுஸ் கீப்பிங் வேலைக்காக மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்றிருந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சொந்த ஊர் திரும்புவதற்காக கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து விமானி அளித்த தகவலின் பேரில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தயராக இருந்த மருத்துவக் குழுவினர், விமான தரையிறங்கியதும், விமானத்திற்குள் ஏறி பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.