சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கிய பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பல்லாவரத்தில் இருந்து குரோம்பேட்டை நோக்கி வந்த அரசு பேருந்து ஜிஎஸ்டி சாலையில் நின்ற ஜீப் மீது லேசாக உரசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு கடைக்குள் இருந்து வெளியே வந்த பெண் வழக்கறிஞர், ஜீப்பிலிருந்த தனது கணவர் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து, எப்படி ஜீப் மீது மோதலாம் என கேட்டு, அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்து அவர்களை தாக்க தொடங்கினர். இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட, பெண் வழக்கறிஞர் தீபிகா ஷாலினி உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.