பெண் அரசு ஊழியருக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்த தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணைய செயல் இயக்குனரின் ஒப்பந்த கார் ஓட்டுநர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தேவகி என்பவர் செயல் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.அவரது காரை ஓட்டும் ஒப்பந்த ஓட்டுநர் கோகுல் ராஜ் அதே அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றும் அனிதாவிற்கு ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் மன உழைச்சலுக்குள்ளான அனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.