திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, சாலை விபத்தில் உயிரிழந்த மின்வாரிய பெண் உதவி பொறியாளரின் உடலை கட்டிப்பிடித்து அவரது கணவர் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. பெண் அதிகாரி தேவிகா தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது, மண்டலவாடி கூட்ரோடு சாலையில் எதிரே வந்த டிராக்டர் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.