ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் உருவாக்க வேண்டும், காலி பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.