பிப்ரவரி 24- ம் தேதி முதல் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஜனவரி மாதத்தில் இருந்து ஊக்கத்தொகையை மட்டும் கிராம சங்கங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்காமல் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்க ஆவின் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதற்கு, பால் உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.