சிவகங்கையில் மகனின் காது குத்து நிகழ்ச்சியில் மகனின் ஆசைக்காக தந்தை காது குத்திக்கொண்ட சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. சிவகங்கையை சேர்ந்த சேகர், செல்வராணி தம்பதியின் 10 வயது மகன் விஸ்வநாதனுக்கு காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தந்தைக்கும் காது குத்த வேண்டும் என மகன் விஸ்வநாதன் அடம்பிடிக்கவே, அவரும் இரண்டாவது முறையாக காது குத்திக்கொண்டார்.